நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஜெயிலர் திரைப்படம் உலகளவில் 650 கோடிக்கும் மேல் வசூலித்தது.
இதையடுத்து ஜனவரி 14ந் தேதி அன்று ஜெயிலர் இரண்டாம் பாகத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் ஜெயிலர் 2-ல் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளதாகவும், அதற்கு ரூ.50 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கேமியோ ரோலில் நடிக்க பாலகிருஷ்ணா கேட்ட சம்பளத்தால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.