பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் கடந்த புதன்கிழமை ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்ததாக ராணுவம் தெரிவித்தது.
இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயருக்கு காப்புரிமை வாங்க தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. இதில் டி சீரிஸ், ஜீ ஸ்டுடியோஸ் போன்ற பிரபல நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக இந்த பெயருக்கு அம்பானியின் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் விண்ணப்பித்திருந்தது. இதற்கு சமூக ஊடகங்களில் கடும் விமர்சனம் கிளம்பியது. இதையடுத்து தனது விண்ணப்பத்தை ரிலையன்ஸ் திரும்பப்பெற்றது.