Saturday, May 10, 2025

முதன்முறைாக அமெரிக்காவை சேர்ந்தவர் புதிய போப் ஆண்டவராக தேர்வு

கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 22- ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து புதிய போப்பை தேர்வு செய்வதற்கான வாடிகனில் உள்ள கார்டினால்கள் சிஸ்டைன் தேவாலயத்தில் ரகசியமாக நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற கூட்டத்தில், புதிய போப் தேர்வு செய்யப்படவில்லை. அதை குறிக்கும் வகையில் கரும்புகை வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை குறிக்கும் வகையில் இரவு 10:00 மணிக்கு புகைபோக்கியில் இருந்து வெள்ளை புகை வெளியேறியது. இதில்

கத்தோலிக்க திருச்சபையின், 2,000ம் ஆண்டு கால வரலாற்றில் அமெரிக்காவைச் சேர்ந்தவர் போப் ஆக தேர்வாவது இதுவே முதன்முறை.

Latest news