Friday, May 9, 2025

பேரழிவு ஏற்படப்போகிறது! பூமியை நோக்கி கழண்டு விழும் விண்கலம்! விஞ்ஞானிகள் கூறுவது என்ன ?

1972ஆம் ஆண்டு, வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய சோவியத் யூனியன் ஒரு முக்கியமான முயற்சியை தொடங்கியது. வெள்ளி என்பது சூரியனுக்கு மிக அருகில் இருக்கும், மிகவும் சூடான கிரகம். அதனால், அங்கு தரையிறங்கும் தொழில்நுட்பம் மிகவும் சிக்கலானது. ஆனாலும், இதுவரை வெற்றிகரமாக வெள்ளி கிரகத்தின் தரையை தொட முடிந்தது சோவியத் விண்கலம் மட்டும் தான்.

அதே ஆண்டில், ‘காஸ்மோஸ் 482’ எனும் மற்றொரு விண்கலனும் வெள்ளி நோக்கி அனுப்பப்பட்டது. இது மிகவும் வலுவான உடலமைப்புடன், அதிக வெப்பத்தையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஆனால், ஒரு நேரம் கணக்கீட்டில் ஏற்பட்ட பிழை காரணமாக அது வெள்ளி நோக்கி செல்லாமல், பூமியின் சுற்றுவட்டத்தில் சிக்கிக்கொண்டது.

இப்போது, 53 ஆண்டுகள் கழித்து… அதே காஸ்மோஸ் 482 பூமிக்குத் திரும்ப வருகிறது. விஞ்ஞானிகள் கணிப்பின் படி, இது மே 8 முதல் 11ம் தேதிக்குள் பூமியில் மோதும் வாய்ப்பு உள்ளது. இதன் எடை சுமார் 453 கிலோகிராம், மணிக்கு 240 கிலோமீட்டர் வேகத்தில் இது பூமியை அடையும் எனக் கூறப்படுகிறது .மேலும்  இது வடக்கீழ்  52° முதல் தெற்கில்  52° வரையான கோணத்தில் எந்தவொரு இடத்திலும் விழ வாய்ப்பு இருக்கிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றார் .

இது விழும் இடத்தில் கட்டிடங்கள் இருந்தால், அது முழுவதுமாக சேதமடையும் என்றும் . காட்டில் விழுந்தால் காட்டுத்தீ உருவாகும் அபாயம் உள்ளது எனவும் கடலில் விழுந்தால் தான் ஆபத்து குறைவாக இருக்கும் எனவும் தகவல் தெரிவிக்கின்றனர்.

இந்த பட்டியலில் உள்ள நகரங்கள்…  என்னவென்றால் நியூயார்க், லண்டன், பாரீஸ், டோக்கியோ, பெய்ஜிங், சிட்னி, சான்டியாகோ மற்றும் ஜோஹன்ஸ்பெர்க்… இவை எல்லாம் விழும் பாதையில் உள்ள முக்கிய நகரங்கள். எனவே, உலகம் முழுவதும் பல நாடுகள் இந்த விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்கின்றன.

இது வெறும் விண்கலம் விழுவது அல்ல, ஒரு பேரழிவு ஏற்படும் இடர்திருப்பம் கூட ஆகலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

Latest news