காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், வரும் 11ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியை வேறு மைதானத்திற்கு பிசிசிஐ மாற்றி உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் எதிரொலியால், இப்போட்டியை அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்திற்கு மாற்றம் செய்துள்ளது பிசிசிஐ.