Thursday, May 8, 2025

தமிழ்நாட்டில் மட்டும் ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

சசிகுமார் நடிப்பில் கடந்த மே 1-ந் தேதி வெளியான திரைப்படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. இந்தப் படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், இப்படம் தமிழ் நாட்டில் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் தமிழ் நாட்டில் மட்டும் ரூ.20 கோடி வசூல் செய்துள்ளது.

Latest news