Friday, May 9, 2025

‘நடிகையின்’ புகைப்படத்திற்கு Like விராட் – அனுஷ்கா லவ்வில் ‘விரிசல்’

முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தற்போது IPL தொடரில் அதிரடியாக ஆடி வருகிறார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி Play Off ரேஸில் முன்னணியில் இருக்க, விராட்டின் பங்களிப்பும் முக்கிய காரணமாகும்.

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வந்த கோலி, கடந்த 2018ம் ஆண்டு இத்தாலியில் வைத்து அவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு வாமிகா, அகாய் என 2 குழந்தைகள் உள்ளனர்.

விராட் விளையாடும் போட்டிக்கு நேரில் சென்று சப்போர்ட் செய்வதை, அனுஷ்கா முக்கிய கொள்கையாகவே வைத்துள்ளார். கிரிக்கெட் போட்டிகளுக்கு இணையாக, விராட் – அனுஷ்கா கியூட் மொமெண்ட்டுகளுக்கும் எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர்.

இந்தநிலையில் விராட் – அனுஷ்கா உறவில் விரிசல் விழுந்துள்ளதாகத் தெரிகிறது. அண்மையில் இருவரும் ஒன்றாக காரில் வந்து இறங்கினர். அப்போது காரில் இருந்து இறங்கிய அனுஷ்காவிற்கு, உதவி செய்யும் நோக்கில் விராட் கைகொடுத்தார். ஆனால் அனுஷ்காவோ கோலியை துளியும் கண்டு கொள்ளாமல், சட்டென இறங்கி நடந்து சென்று விட்டார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக, இதைப்பார்த்த ரசிகர்கள் ” ரெண்டு பேருக்கும் என்னாச்சு?, யாரும் கண்ணு வச்சுட்டாங்களா?,” என்று, கேள்வி எழுப்பி வருகின்றனர். பாலிவுட் நடிகை அவ்னீத் கபூரின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்றை, அண்மையில் விராட் Like செய்து பின்னர் Dislike செய்தார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் Feedஐ Clear செய்யும்போது, தவறுதலாக இவ்வாறு நடந்து விட்டது என்று, அதற்கு அவர் விளக்கமும் அளித்திருந்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு தான் முதன்முறையாக அனுஷ்கா இப்படி, பொதுவெளியில் நடந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news