12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில் அரியலூர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்தது.
தமிழகத்தில் 7,92,494 மாணவர்கள் தேர்வு எழுதியதிய நிலையில் 7,53,142 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கூடுதல் விகிதத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ஓவியாஞ்சலி என்ற மாணவி 600-க்கு 599 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். இந்த மாணவி ஆங்கில பாடத்தில் மட்டும் 99 மதிப்பெண்களும், மற்ற பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.