இப்போதெல்லாம் தங்கம் என்பது, சாமான்ய மக்கள் முதல் முதலீட்டாளர்கள் வரை அனைவரும் விரும்பும் மதிப்புமிக்க சொத்தாக மாறிவிட்டது. திருமணங்கள், பண்டிகைகள், மற்றும் முக்கிய நிகழ்வுகளில் நகை வாங்குவது வழக்கம். சிலர் தங்கத்தை ஒரு நம்பகமான முதலீடாகவும் பார்க்கிறார்கள். ஆனா, தங்கம் வாங்கும் போது எல்லாம் ஒரு முக்கிய விஷயத்தை மறக்கக்கூடாது – அதாவது வருமான வரி விதிகள்.
தங்கம் வாங்குவதற்கு எந்த வரம்பும் இல்லையென்று சொல்லலாம். நீங்கள் எவ்வளவு தங்கம் வேண்டுமானாலும் வாங்கலாம். ஆனால் அதை ரொக்கமாக வாங்கும்போது, சில கடுமையான விதிகள் இருக்கின்றன. ஒரே ஒரு பரிவர்த்தனையில், அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வரைதான் ரொக்கமாக செலுத்த அனுமதி உள்ளது. அதற்கு மேல் செலுத்த வேண்டுமெனில், வங்கியின் மூலம், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு போன்ற முறைகளை பயன்படுத்த வேண்டும்.
இந்த விதியை மீறி, ரூ. 2 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக செலுத்தினீர்கள் என்றால், வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வரும் வாய்ப்பு உள்ளது. இது சிறிய விஷயம் இல்ல. அது மட்டுமல்ல, விசாரணையும் வரும், அபராதமும் விதிக்கப்படும்.
மேலும், ரூ. 2 லட்சத்திற்கும் மேல் தங்கம் வாங்கும் போது, வாடிக்கையாளர்கள் பான் கார்டு அல்லது ஆதார் கார்டு போன்ற அடையாள ஆவணங்களை கொடுக்க வேண்டும். இது இல்லாமல், நகைக்கடையிலும் ரொக்கமாக அந்த தொகையை ஏற்கவே முடியாது. கடை உரிமையாளர்களுக்கும் இதை சரியாக பதிவு செய்து வைக்க கடமை இருக்கிறது.
இதெல்லாம் ஏன் முக்கியம் தெரியுமா? நாட்டில் பிளாக் மனி மற்றும் மோசடிகளைத் தடுக்கதான் இந்த வகை கட்டுப்பாடுகள் வைக்கப்படுகின்றன. அதனால், இவை சாதாரண விதிகள் அல்ல. இந்த விதிகளை பின்பற்றினால்தான், உங்கள் வாங்கும் பணமும் பாதுகாப்பாக இருக்கும், வருமான வரி பிரச்சனைகளும் வராது.
தங்கம் வாங்குவது உற்சாகமான விஷயம் தான். ஆனால் அதில் சட்ட விதிகளை பின்பற்றினால் தான் அது சுமையாக மாறாமல், ஒரு நிம்மதியான முதலீடாக இருக்கும்.