Thursday, May 8, 2025

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மூலம் மிரட்டல் : இளைஞரை கைது செய்த போலீஸ்

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள வழிபாட்டு தளம் ஒன்றில் நடைபெற்ற திருவிழாவின் போது, அப்பகுதி பட்டறை தெருவை சேர்ந்த ஷாம் சுந்தர் என்ற இளைஞரை சத்தியா என்ற இளைஞர் குத்தி படுகொலை செய்தார்.

இந்த வழக்கில் 17 வயது இளைஞர் உட்பட 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், இறந்த இளைஞர் ஷாம் சுந்தர் படத்தை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து ” நீ சிந்திய ரத்தம் வீண் போகாது பழிக்கு பழி வாங்குவோம்” என பதிவிட்ட சத்தீஸ்வரன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Latest news