தஞ்சையில்,பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என பயத்தில், தற்கொலை செய்து கொண்ட மாணவி ஆர்த்திகா, 413 மதிப்பெண்களை பெற்று பாஸ் ஆகியுள்ளார்.
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ, என்ற பயத்தில் ஆர்த்திகா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். ஆனால், அந்த மாணவி 413 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.
தேர்வு முடிவை பார்த்த மாணவியின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அதிக மதிப்பெண்கள் பெற்றும் தேவையில்லாத அச்சத்தில் மாணவி ஆர்த்திகா, தற்கொலை செய்து கொண்டு இருப்பது அந்த பகுதி மக்களிடையே மட்டுமின்றி அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
தற்கொலை குறித்த விழிப்புணர்வை, மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்களும், பெற்றோர்களும், மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.