Thursday, August 21, 2025
HTML tutorial

பாகிஸ்தானை பழி தீர்க்க இந்தியா களமிறக்கிய கொடூர அரக்கன்கள்!

இந்தியா, பாகிஸ்தானின் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலாக, “ஆப்பரேஷன் சிந்தூர்” எனும் அதிநவீன ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. இந்த தாக்குதலில், இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் அமைப்புகளுக்கு நேரடி தாக்குதலை செய்துள்ளது.

இந்த தாக்குதலில் இந்திய ராணுவம், அதிநவீன மற்றும் துல்லியமான ஆயுதங்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தானின் கொடூர அரக்கர்களை வீழ்த்தியது. முக்கியமாக, SCALP Cruise Missile. இந்த ஏவுகணை 250 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக அழிக்கும் வல்லமை கொண்டது. இது, பாகிஸ்தானின் முக்கிய பயங்கரவாத தளங்களை பாதித்தது.

இதனைத் தொடர்ந்து, HAMMER Bombs. இந்த வெடிகுண்டுகள் 50 முதல் 70 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கட்டிடங்களை மற்றும் பதுங்கு குழிகளை முறியடிக்கும் திறன் கொண்டவை. இந்த வெடிகுண்டுகள், பயங்கரவாத முகாம்களை செதுக்கி, அதிரடியான தாக்கத்தை ஏற்படுத்தின.

அடுத்ததாக, Kamikaze drones. இந்த ட்ரோன்கள், இலக்குகளை கண்டறிந்து, அதில் துல்லியமான தாக்குதல்களை மேற்கொள்ளுகின்றன. அவை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளை குறி வைத்து தனித்தனியாக  ஒவ்வொருவரையும் இலக்காகக் கொண்டு தாக்கியது.

இந்த அதிநவீன தாக்குதலின் மூலம், இந்திய ராணுவம் பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது. தகவல்களின் படி, 80 முதல் 90 பயங்கரவாதிகள் இந்த தாக்குதல்களில் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்திய ராணுவத்தின் இந்த அதிநவீன செயல்பாடு, உலகுக்கு புதிய பாதுகாப்பு வழியைக் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது .

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News