நடப்பு IPL தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்கு கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் முக்கிய காரணமாக இருக்கிறார். பஞ்சாப் அணியின் ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல் விரலில் ஏற்பட்ட காயத்தால் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
அவருக்குப் பதிலாக மற்றொரு ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர், Mitchell Owenஐ ரூபாய் 3 கோடி கொடுத்து பஞ்சாப் வாங்கியுள்ளது. IPLக்கு மாற்றாக பாகிஸ்தானால் தொடங்கப்பட்ட PSL தொடரில், பாபர் அசாமுடன் இணைந்து Mitchell விளையாடினார்.
அவர்களின் அணி Play Off வாய்ப்பினை இழந்து விட்டது. என்றாலும் Mitchell IPL தொடரில் இணைந்தது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து அவரை சமூக வலைதளங்களில் மோசமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
PSLஐ விட IPLல் கிடைக்கும் புகழ் வெளிச்சம், சம்பளம் எல்லாமே 10 மடங்கு அதிகம். எனவே Mitchell மீண்டும் PSL தொடரில் விளையாடுவது சந்தேகமே. இதனால் தான் பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள் இவரை, எண்ணெய் சட்டியில் போடாத குறையாக வறுத்தெடுத்து வருகின்றனர்.