நேற்று நடந்த நீட் தேர்வின் போது, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவி அணிந்திருந்த ஆடையில் இருந்த பட்டன் நீக்கப்பட்ட சம்பவம், பெண்கள் அணிந்திருந்த தாலி, மூக்குத்தி அகற்றியது போன்ற பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான், இந்தியா முழுமைக்கும் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். என் மாநிலத்தில் மட்டும் ஏன் இந்த கொடுமை நடக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாமல் என் மாநிலத்தில் மட்டும் என் பிள்ளையின் துப்பட்டாவை எடுக்கிறார்கள். பூணூல், அரைஞாண்கயிறு அறுக்கப்படுகிறது. முழுக்கை சட்டை கத்தரிக்கப்படுகிறது.
இந்த மூக்குத்திக்குள்ளே எப்படி பிட்டு கொண்டு போக முடியும்? தாலியில் எப்படி பிட்டு கொண்டு போக முடியும்?.
“வடமாநிலங்களில் புத்தகம் வைத்து நீட் தேர்வு எழுதுகிறார்கள், ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் மாணவர்களை அவமானப்படுத்தும் விதமாக விதிகள் பின்பற்றப்படுகின்றன.
என் பிள்ளைகள் அனைவரும் கண்ணீரோடு உள்ள தேர்வு எழுதுகிறார்கள். இது மாதிரி ஒரு மனிதவதை கொடுமை ஏதாவது உண்டா? என பேசியுள்ளார்.