Wednesday, December 17, 2025

சதி ஏதும் நடக்கவில்லை – காவல்துறை அளித்த விளக்கத்தை மதுரை ஆதினம் ஏற்க மறுப்பு

சென்னை காட்டாங்குளத்தூர் நோக்கி, கடந்த 3-ம் தேதி மதுரை ஆதினம் சென்ற கார் விபத்தில் சிக்கியது. நம்பர் பிளேட் இல்லாத வாகனம் தன் மீது மோதியதாகவும், தன்னை கொல்ல சதி நடப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை மதுரை ஆதினம்முன் வைத்தார்.

இதை மறுத்த காவல்துறை, விபத்துகுறித்தான சிசிடிவியை வெளியிட்டது. ஓட்டுநரின் கவனக்குறைவால் தான் விபத்து நடந்தது எனக்கூறி மதுரை ஆதினத்தின் கார் ஓட்டுநர் மீதும் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், மதுரை ஆதினம், காவல்துறையின் இந்த விளக்கத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். காவல்துறை கூறுவது முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ளார்.

Related News

Latest News