Monday, May 5, 2025

மாணவிகளின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த மென்பொறியாளர் கைது

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவிகளின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாவில் அனுப்பிய மென் பொறியாளரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சாலையாந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் நக்கீரன். 25 வயதான இவர், தன்னுடன் பள்ளியில் படித்த சிதம்பரம் அண்ணா பல்கலைகழக மாணவி மற்றும் அவரின் தோழியுடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் இளைஞருடனான பழக்கத்தை இருவரும் துண்டித்த நிலையில், ஆத்திரமடைந்த நக்கீரன், மாணவிகள் இருவரின் படங்களையும் ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாவில் அனுப்பியுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவத்தில் இளைஞரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Latest news