இந்திய பங்குச் சந்தை இன்று காலை வேகமான வளர்ச்சியுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச் சந்தையின் முக்கிய குறியீட்டான சென்செக்ஸ், காலை 11 மணி நிலவரப்படி 449 புள்ளிகள் உயர்ந்து 80,951.28 புள்ளிகளில் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இதேபோல், தேசிய பங்குச் சந்தை குறியீடு நிஃப்டி 153 புள்ளிகள் உயர்ந்து 24,500.40 என்ற நிலையில் உள்ளது.
அதானி போர்ட்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன், பஜாஜ் ஃபின்சர்வ், எம்&எம், பவர் கிரிட், எச்.சி.எல். டெக், டாடா மோட்டார்ஸ், டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ், எச்.டி.எஃப்.சி. வங்கி மற்றும் ஐ.டி.சி. ஆகிய நிறுவனங்களில் பங்குகள் அதிக லாபத்தில் விற்பனையாகிறது.
கோட்டக் மஹிந்திரா வங்கி, எஸ்.பி.ஐ, எல் அண்ட் டி மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவை பெரும் இழப்பை சந்தித்துள்ளன.