Thursday, January 15, 2026

வெளிச்சத்திற்கு வந்த உண்மை…மதுரை ஆதீனம் கார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு

கடந்த மே 3-ஆம் தேதி சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக மே 2-ம் தேதி மதுரை ஆதீனம் மதுரையில் இருந்து காரில் சென்னை புறப்பட்டார். உளுந்தூர்பேட்டை அருகே சென்றபோது மதுரை ஆதீனம் பயணித்த கார் மீது மற்றொரு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், “என்னை திட்டமிட்டு கொலை செய்ய சதி நடந்தது” என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் மதுரை ஆதீனத்தின் வாகனம் அஜிஸ் நகர் மேம்பாலத்தில் செல்வதற்கு பதிலாக, அஜிஸ் நகர் பிரிவு சாலை வழியாக சேலம் ரவுண்டானா அருகே உளுந்தூர்பேட்டை மார்க்கத்தில் அதிவேகமாக சென்றுள்ளது. அப்போது அவ்வழியாக வந்த மற்றொரு வாகனத்தில் லேசாக மோதியுள்ளது.

இந்நிலையில் அதிவேகமாக கார் ஓட்டிய புகாரில் மதுரை ஆதினத்தின் ஓட்டுநர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related News

Latest News