சோளிங்கா் அருகே, 12ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் அருகே அகத்தியர் என்ற இளைஞர் 12ஆம் வகுப்பு மாணவியின் கையை பிடித்து இழுத்து அத்துமீறலில் ஈடுபட்டார். இது குறித்து மாணவியின் தந்தை சோளிங்கா் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சோளிங்கா் காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர் அகத்தியரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.