Monday, December 22, 2025

திருச்சி விமான நிலையத்தில் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான விஷப்பாம்புகளை பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான விஷப்பாம்புகளை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு பயணியை சோதனை செய்தபோது, அவரது உடமையில் 25 விஷப்பாம்புகள் இருந்ததை கண்டறிந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பாம்புகளின் மதிப்பு 25 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த பாம்புகளை எதற்காக கடத்தி வந்தார் என்பது குறித்து பயணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News