பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையே தற்போதுள்ள உறவுகள் சீராக இல்லை.
இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப்படலாம் என்று தகவல்கள் எழுந்துள்ளன. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடாது என்றும் போட்டி தொடர் ஒத்தி வைக்க அதிக வாய்ப்பு உள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.