Tuesday, December 23, 2025

கோடை விடுமுறை : ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வு

பள்ளி மாணவர்களுக்கு தற்போது கோடை விடுமுறை என்பதால் பலரும் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். ரயிலில் டிக்கெட் கிடைக்காதவர்கள் தற்போது ஆம்னி பேருந்தில் செல்ல தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நாகர்கோவில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, கோவை போன்ற இடங்களுக்கு செல்வதற்கு ஆம்னி பஸ்களில் ரூ.200 முதல் ரூ.500 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதே ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வர ரூ.500 முதல் ரூ.700 வரை கட்டணங்கள் கூடுதலாக வசூல் செய்யப்படுகிறது. இந்த கட்டண உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related News

Latest News