Wednesday, May 7, 2025

அமெரிக்காவிடம் குட்டு வாங்கிய பாகிஸ்தான்! இனியாவது அடங்குமா? பாக். பிரதமருக்கு பறந்த ஃபோன் கால்!

“மறுபடியும் இப்படி ஒன்னு நடக்கக்கூடாது… தீவிரவாதம் ஒழியனும்… எங்களுக்கு நீதி வேண்டும்…” என சத்தமாய் ஒலிக்கும் இந்த மாதிரியான குரல்கள் பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் இருந்து மட்டும் தான் எழுகின்றனவா? இல்லவே இல்லை. உலக மக்கள் எல்லாருமே “அமைதி” என்ற ஒற்றை புள்ளியை நோக்கியே பணிப்பதையே விரும்புகிறார்கள்.

இந்நிலையில் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பு கொடுக்காமல் முரண்டுபிடித்து அடாவடித்தனமாக உளறிக்கொண்டிருப்பதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருக்கிறது. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இதுபற்றி பேசும்போது, “இந்தியாவுக்கு பாகிஸ்தான் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என்று நெற்றிப்பொட்டில் அடித்தது போல் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

நேற்று பாகிஸ்தான் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், “இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா அளிக்கும் பதிலடி, இரு பகுதிகளுக்கும் இடையே போரை தூண்டிவிடாதவாறு இருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணமாக இருந்தால் அதை ஒழிக்க இந்தியாவுடன் இணைந்து நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியிருப்பது தற்போது முக்கியத்துவம் பெறுகிறது.

ஏனென்றால் ஒரு சில நாட்களாக பாகிஸ்தானிலிருந்து வரும் பிதற்றல்கள் அப்படி… அந்நாட்டு அமைச்சர்கள் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி பொறுப்பில்லாமல் செயல்படுவதை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். முன்னதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வெளிப்படையாகவே இதுபற்றி பாகிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif-ஃபை ஃபோனில் தொடர்பு கொண்டு, இந்தியா மேற்கொள்ளும் அனைத்து விசாரணை நடவடிக்கைகளுக்கும் பாகிஸ்தான் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இரு நாடுகளும் பதற்றங்களை குறைத்து தெற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Latest news