Sunday, June 1, 2025

உலர் திராட்சையில் 1 கோடி நன்மைகள்.. இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..?

உலர் திராட்சை என்பது ஒரு உலர்ந்த திராட்சை, மற்று பெயர் ரைசின் (raisin) என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு வகை பழமாகும், இது வெயிலில் அல்லது பிற முறைகளில் உலரவைக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.

உலர் திராட்சை தயாரிப்பது மிகவும் எளிமையான ஒன்றாகும்.. திராட்சையை உலர வைத்து, அதன் ஈரப்பதத்தை நீக்கி, சுருங்கிப்போகச் செய்வதன் மூலம் உலர் திராட்சை (Raisins) கிடைக்கிறது.

பண்டைய எகிப்தியர்கள் சூரிய ஒளியில் திராட்சையை உலர்த்தி உணவு மற்றும் மருந்தாக பயன்படுத்தியுள்ளனர். கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள் இதை ஆடம்பர உணவுப் பொருளாக பயன்படுத்தினர் என்று இதற்கு ஒரு வரலாறும் இருக்கிறது 

சரி,உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

இரும்புச்சத்து நிறைந்த உலர் திராட்சை ஊறவைத்து சாப்பிடுவது இரத்த சோகையைத் தடுக்க உதவியாக இருக்கிறது என்கின்றனர் வல்லுநர்கள்.

பொட்டாசியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஊறவைத்த உலர் திராட்சை சாப்பிடுவது கொழுப்பைக் குறைப்பதால், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் வழிவகுக்கிறது.அது மட்டுமின்றி கால்சியம் மற்றும் போரான் நிறைந்த உலர் திராட்சை ஊறவைத்து சாப்பிடுவது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்..

இதில் வைட்டமின் சி, பி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவை நிறைந்த உலர் திராட்சை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, வைட்டமின் சி மற்றும் பிற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உலர் திராட்சை ஊறவைத்து சாப்பிடுவது சரும ஆரோக்கியத்திற்கு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

உங்களின் உணவு முறைகளில் ஏதேனும் மாற்றத்தை கொண்டுவர நினைத்தால் தகுந்த மருத்துவரின் ஆலோசனையோடு மாற்றுவது சிறந்தது.. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news