Thursday, January 15, 2026

சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கடந்த 28-ந் தேதி அவரது ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைதளபக்கத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலை விரைவில் துண்டாக்கப்படும். தெலுங்கு பேசும் மக்களை தவறாக பொதுத் தளத்தில் பதிவிட்டால் அதற்கு முழு பொறுப்பு சீமான்தான். அதன் விளைவு மரணம் என்று, சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து மிரட்டல் விடுத்த சந்தோஷ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சீமானுக்கு கொலைமிரட்டல் விடுத்த ஆண்டிபட்டி ஜக்கம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரை, தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

Related News

Latest News