Saturday, July 12, 2025

ஒன்பதாம் வகுப்பு மட்டுமே படித்து மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் மருத்துவம் படிக்காமல் ஒருவர் மருத்துவம் பார்த்து வருவதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் மருத்துவ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதில் வயிற்று வலி ஏற்படுவது போல் அந்த மருத்துவமனைக்கு சென்ற போது, அங்கு இருந்த எஸ்தர் என்ற பெண் அந்த நபருக்கு ஊசி போட முயன்றுள்ளார். அப்போது மருத்துவ துறை அதிகாரிகள் அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர்.

இந்த விசாரணையில் மருத்துவம் படிக்காமலேயே மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது. மேலும் அந்தப் பெண் எஸ்தர்(30), என்பதும் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்து ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news