Saturday, May 3, 2025

100 நாள் வேலைத் திட்டம்; தமிழகத்திற்கு ரூ.2,999 கோடியை விடுவித்தது மத்திய அரசு

கிராமப்புற மக்களின் வாழ்வை மேம்படுத்த, 100 நாள் வேலை அளிக்கும் திட்டத்தை, 2005ல் அப்போதைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது.

நாடு முழுதும், 740 மாவட்டங்களில், 13.42 கோடி பேர் பயனாளிகளாக உள்ளனர். இந்த திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு, 4,034 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவிக்காமல் நிறுத்தி வைத்து உள்ளது என தமிழக அரசு குற்றம் சாட்டி இருந்தது.

இந்நிலையில் 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழகத்திற்கான ரூ.2,999 கோடியை மத்திய அரசு விடுவித்தது. இந்த திட்டத்தில் நிலுவையில் இருந்த ரூ.4,034 கோடியை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், ரூ.2,999 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

Latest news