சேப்பாக்கம் மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மோதுகின்றன. 2020க்கு பிறகு மோசமான ஒரு தொடரை CSK சந்தித்துள்ளது.
ஏலத்தில் நல்ல வீரர்களை எல்லாம் கோட்டை விட்ட சென்னை, தற்போது Pitch சரியில்லை என்று, சொந்த மைதானத்தின் மீது பழி போடுகின்றனர். இந்தநிலையில் பஞ்சாபிற்கு எதிராக அணியின் பேட்டிங் ஆர்டரில், மிகப்பெரும் மாற்றங்களை தோனி செய்துள்ளாராம்.
ஓபனர்களாக ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே இறங்குவர். ஒன் டவுனில் டெவால்ட் பிரேவிஸ் இறங்குவார். 4 மற்றும் 5வது இடங்களில் சிவம் துபே, தீபக் ஹூடா இறங்குவார்கள். 6,7 இடங்களில் ஜடேஜா, தோனி இறங்கி விளையாட இருக்கின்றனர்.
மற்ற இடங்களில் சாம் கரண், அன்ஷூல் கம்போஜ், நூர் அஹமது, கலீல் அஹமது ஆகியோர் இடம் பெறுவார்கள். மேற்கண்ட வீரர்கள் நன்றாக பெர்பார்ம் செய்தால், 2026ம் ஆண்டிலும் இதே பிளேயிங் லெவனுடன் இறங்கிட சென்னை அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம்.
இதை எல்லாம் பார்க்கும்போது ‘கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதுக்கு,” என்று கேட்கத் தோன்றுகிறது.