Wednesday, April 30, 2025

ஜியோவின் ரீசார்ஜ் திட்டம்; இவ்வளோ கம்மியாவா..? 1 வருடத்திற்கு கவலையில்லை..

Reliance Jio- வில் பல ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் உள்ளன, அவை வரம்பற்ற அழைப்பு, டேட்டா சலுகைகள், மற்றும் பிற சேவைகளை வழங்குகின்றன. இந்த சேவை மிகவும் விலை குறைந்த ரூ.900க்கு ஒரு வருட செல்லுபடியாகும் திட்டம் ஒன்று உள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூ.895. இதன் தினசரி செலவு ரூ.2.66 ஆகும் .

இதன்மூலம், டேட்டா, SMS மற்றும் அழைப்புகளை பெற முடியும். இதில் மொத்தம் 24 GB டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில், 28 நாட்களுக்கு 2 GB டேட்டா மட்டுமே வழங்கப்படும். 12 மாதங்களுக்கு ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். அது மட்டுமின்றி 600 SMS இலவசம் என்கின்றனர் .

இதில் எந்த நெட்வொர்க்கிலும் யாருடனும் 336 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகளுக்குப் பேச முடியும். இந்த திட்டத்தின் மூலம், ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட்டின் இலவச சந்தாவையும் பெற முடியும். ஜியோவின் இந்த ரூபாய். 895 திட்டம் ஜியோபோன் பயன்படுத்துவோருக்கு மட்டுமே பொருந்தும்.

சாதாரண ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் ரூ.1748 திட்டத்தின் மூலம் 336 நாட்களுக்கான சேவையை பெறலாம். இதன்மூலம், வரம்பற்ற அழைப்பு மற்றும் 3600 SMS வசதியைப் பெறலாம். டேட்டா வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news