Monday, December 29, 2025

தவெக வுடன் கூட்டணியா? நயினார் நாகேந்திரன் சொன்ன பதில்

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். அங்கு பிரதமருக்கு சால்வை அணிவித்து ‘ஜல்லிக்கட்டு’ சிலையை பரிசாக வழங்கினார்.

இந்நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது : பாஜக – தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பேச்சு நடப்பதாக எனக்குத் தெரியவில்லை. நேற்று தான் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விட்டு வருகிறேன்.

திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும். தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. தேர்தல் பணியை அவர்கள் ஆரம்பித்து இருக்கலாம்; ஆனால் ஆட்சிக்கு வருவதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related News

Latest News