BSNL நிறுவனம் புதிய சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. இப்போது, 4G மற்றும் 5G சிம் கார்டுகளை நீங்கள் உங்கள் வீட்டு வாசலுக்கே டெலிவரி செய்ய முடியும். வெயில் காலம் வரவேற்பில், மக்கள் வீட்டை விட்டு வெளியே போகாமல் அத்தியாவசிய பொருட்களை ஆன்லைனில் வாங்கி வருவதை விரும்புகிறார்கள். இதோ, பிஎஸ்என்எல் நிறுவனம் அந்த வசதியை சிம் கார்டுகளுக்கும் கொண்டுவந்துள்ளது.
இந்த புதிய சேவையை பயன்படுத்தி, BSNL 5G மற்றும் 4G சிம் கார்டுகளை 90 நிமிடங்களில் உங்கள் வீட்டிலேயே பெறமுடியும் . ஆன்லைனில் நீங்கள் உங்கள் விருப்பத்திற்கேற்ற திட்டத்தை தேர்வு செய்து, புதிய சிம் கார்டை ஆர்டர் செய்து கொள்ளலாம்.
BSNL 5G சிம் கார்டுகளை வாங்க விரும்பும் பயனர்கள் prune.co.in என்ற இணையதளத்தில் சென்று, “Buy SIM card” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு, BSNL ஐ தேர்வு செய்து, உங்களுக்கு சரியான திட்டத்தை (FRC) தேர்வு செய்யவும். அடுத்த படியாக உங்கள் பெயர், மொபைல் எண், OTP மற்றும் வீட்டு முகவரியை பதிவுசெய்து, தேவையான தகவல்களை பூர்த்தி செய்தவுடன், 90 நிமிடங்களில் உங்களுக்கு சிம் கார்டு வந்து சேரும்.
இந்த சேவையால், மக்கள் நேரடியாக அலுவலகங்களுக்கு சென்று சிம் கார்டுகளை வாங்கி அவதிப்படாமல், ஆன்லைனில் உங்களுக்கே தேவையான BSNL சிம் கார்டுகளை ஆர்டர் செய்ய முடிகிறது. பிஎஸ்என்எல் 5G சேவை இந்தியாவின் பல பகுதிகளில் கிடைக்கத் தொடங்கியுள்ளது, மேலும் அதன் 4G சேவையை விரிவுபடுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த புதிய சேவையை பயன்படுத்தி, நீங்கள் BSNL சிம் கார்டை வீட்டு வாசலுக்கே பெற்றுக் கொள்ளுங்கள்!