Monday, April 28, 2025

“போப் விட்டுச்சென்ற சொத்து இவ்வளவா?”மண்ணோடு மண்ணான பிறகு வெளிவந்த ரகசியம்..!

போப் பிரான்சிஸ் – உலகின் மிகச்சிறந்த ஆன்மீக தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர். ஏழைகளுக்காகவும், அடக்குமுறைகளுக்கு எதிராகவும், அன்பையும் பரிவையும் பேசியவர். ஆனால் அவருடைய வாழ்க்கையின் முடிவில், ஒரு செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவருடைய சொத்து மதிப்பு வெறும் $100 மட்டுமா?

ஆமாம், போப் பிரான்சிஸ் தனது வாழ்க்கையின் முழுக்கவும் எளிமையான வாழ்க்கையை தேர்ந்தெடுத்தார். அவருக்குக் கிடைக்கும் மாத சம்பளமான $32,000 டாலரைக் கூட அவர் எடுத்துக்கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக அந்த தொகையை சமுதாய சேவைகளுக்கும், ஏழைகளுக்காகவும் தானமாக வழங்கினார்.

போப் பிரான்சிஸ் இறப்பதற்கு முன், ரோம் நகரில் உள்ள ஒரு சிறைச்சாலையில் உள்ள இளைஞர்களுக்காக பாஸ்தா தயாரிக்கும் பயிற்சி திட்டத்திற்கு சுமார் €200,000 யூரோக்களை நன்கொடையாக அளித்தார். இது அவர் செய்த கடைசி பெரிய சமூக நல உதவியாகும்.

வாடிகன் நகரம், உலகின் மிகப் பெரிய கிறிஸ்தவ அமைப்பாக இருந்தாலும், அதில் உள்ள செல்வங்கள் அனைத்தும் போப்பிற்குரியதல்ல. அது ஒரு ஆன்மீக நிறுவனம், மக்களுக்காகவே அதன் சொத்துகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே போப்பின் கொள்கை.

இறந்தபின், வாடிகனின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, போப் பிரான்சிஸ் அவருடைய சொத்து மதிப்பு வெறும் $100 மட்டுமே இருந்ததாகவும், அவர் இறந்தபோது தனிப்பட்ட சொத்துகள் எதுவும்  இல்லாத நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது அவர் எவ்வளவு எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.

இத்தனை பெரிய பதவியில் இருந்தும், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏழைகளுக்குள் வாழ்ந்த ஒரு மனிதர். போப்பின் இந்த வாழ்க்கை நம்மை சிந்திக்க வைக்கிறது. நாம் வாழ்வதில், எவ்வளவு எடுத்துக்கொள்கிறோம் என்பதைக் காட்டிலும், எவ்வளவு கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

Latest news