பொது ‘வைபை’ நெட்வொர்க்குகள் மூலம் வங்கி அல்லது ஆன்லைன் ஷாப்பிங் போன்ற செயல்களை செய்ய வேண்டாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், விமான நிலையங்கள், ஹோட்டல்கள் போன்ற இடங்களில் வழங்கப்படும் இலவச வைபை சேவைகள் பாதுகாப்பற்றவையாக இருக்கக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய பொது வைபை நெட்வொர்க்குகள் முறையான பாதுகாப்பின்றி இயங்கும் நிலையில், ஹேக்கர்களும் மோசடி செய்பவர்களும் பயனர்களின் தனிப்பட்ட மற்றும் நிதி தொடர்பான தகவல்களை எளிதில் திருட முடியும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொது நெட்வொர்க்குகளை பயன்படுத்தும் போது எந்தவிதமான பரிவர்த்தனையையும் அல்லது தனிப்பட்ட தகவல்களையும் பதிவிட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.