2026-ம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு பூத் கமிட்டியை பலப்படுத்தும் பணியில் விஜய் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். முதல்கட்டமாக கொங்கு மண்டல பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான மாநாடு கோவையில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார். தவெக தொண்டர்களின் கூட்டத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் தவெக கருத்தரங்கில் பங்கேற்க விஜய் வந்த போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தவெக தொண்டர்கள் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கார், பைக் உள்பட 133 வாகனங்கள் மீது வழக்குப்பதிவுசெய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.