சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் மீண்டுமொரு தோல்வியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்தித்துள்ளது. இதனால் நடப்பு IPL தொடர் CSKக்கு மோசமானதொரு Nightmare ஆக மாறியுள்ளது. இந்தநிலையில் சென்னை அணியில் நாளுக்குநாள் முட்டல், மோதல்கள் அதிகரித்து வருகின்றன.
சென்னை குறித்து இதுவரை விமர்சிக்காத முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூட, ”ஏலத்திலேயே சென்னை கோட்டை விட்டுவிட்டது. இளம்வீரர்கள், அனுபவ வீரர்கள் என இருதரப்பு வீரர்களையுமே எடுக்கவில்லை,” என அண்மையில் கொந்தளித்தார்.
இதேபோல கேப்டன் தோனி, பயிற்சியாளர் பிளெமிங் இருவருமே கிடைத்த வாய்ப்பினை வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை, என்று விமர்சித்து இருக்கின்றனர். இந்தநிலையில் ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில், களத்திலேயே தோனி சூடான சம்பவம் நடந்துள்ளது.
CSKவின் ஓபனராக இறங்கிய ஷேக் ரஷீத் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அந்த அடியில் இருந்து கடைசிவரை, சென்னையால் மீளவே முடியவில்லை. 154 ரன்களுக்கு சுருண்டு தோல்வியைத் தழுவியது. இந்தநிலையில் SRH வீரர்கள் பேட்டிங் செய்தபோது, 8வது ஓவரின் கடைசிப்பந்தை இஷான் எதிர்கொண்டார்.
அந்த பந்தில் அவர் சிங்கிள் தட்டிவிட்டு ரன் ஓடினார். அப்போது பீல்டிங்கில் இருந்த ரஷீத் பந்தை எடுத்து ஸ்டம்பிங் செய்யும் நோக்கில் எறிந்தார். ஆனால் அங்கு யாரும் இல்லாததால், பந்து ஓவர்த்ரோ ஆகியது. இதைப்பார்த்த இஷான் மீண்டுமொரு ரன்னை ஓடியே எடுத்து விட்டார்.
இதைப்பார்த்த தோனியின் முகம் கோபத்தில் சிவந்து போனது. ரஷீதை பார்த்து, ”கொஞ்சமாச்சும் மூளையை யூஸ் பண்ணுப்பா,” என்பது போல சைகை காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக, ”அவ்ளோ தான் நம்மள முடிச்சு விட்டீங்க போங்க,” என்று, ரசிகர்கள் தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.