Saturday, April 26, 2025

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க போறீங்களா? இந்த முக்கியமான தகவல்களை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்!

“என்னதான் சொல்லுங்க… அரசாங்க வேலைன்னா அரசாங்க வேலை தான்… அதுக்கு ஒரு தனி மதிப்பு தான்…” என்று நினைக்கும் பலருக்கு கைக்கொடுக்கும் ஒன்று குரூப் 4 தேர்வு என்றால் அது முற்றிலும் உண்மையே.  ஆண்டு ஒன்றுக்கு சுமார் 10000 பேருக்கு அரசு வேலைகளை அள்ளி தந்து வருகிறது. இந்த தேர்வில் Pass ஆனால் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள், இளநிலை உதவியாளர் பணியிடங்கள், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் உள்பட பல்வேறு பணியிடங்களில் சேர முடியும். இப்படி Life-ல் settle ஆனவர்கள் பலர் இருக்கிறார்கள்.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் போன்ற 3,935 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 12 அன்று நடைபெற இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு மாதம் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதால் தற்போது பொதுமக்கள் ஆர்வமுடன் விண்ணப்பிக்க தொடங்கிவிட்டனர். இந்நிலையில் தேர்வின் விண்ணப்பதாரர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று இருக்கிறது. அது மட்டுமில்லாமல் குரூப் 4 தேர்வு எழுதிய பலருக்கும் அவர்களே எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடந்துள்ளன. அவை என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இதில், கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு 215 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதோடு 2025-ம் ஆண்டுக்கான குரூப்4 தேர்வுக்கு விண்ணப்பம் வழங்கும் பனி நேற்று முதல் தொடங்கியுள்ளது. தேர்வர்கள் அடுத்த மாதம் அதாவது மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். திரையில் கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று TNPSC-யால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பங்களில் திருத்தங்களை செய்ய மே மாதம் 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை 3 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ள்ளதாக தகவல்கள் சொல்கின்றன.

தற்போது, வெளியிடப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அரசு துறை மற்றும் அரசு நிறுவனங்களிடம் இருந்து அதிகரித்து பெறப்பட்டால் கலந்தாய்வுக்கு முன்னர் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்பதை வெளிப்படையாகவே TNPSC அறிவித்திருப்பது நல்ல செய்தி. எனவே வெறும் 3,935 பணியிடங்கள் தானே என்று விண்ணப்பிக்காமல் இருந்துவிட வேண்டாம். இது 10,000 வரை அதிகரிக்கப்படலாம். எப்படியெனில் தற்போது அதனைவிட அதிகமாகவே குரூப் 4 காலியிடங்கள்  உள்ளன. எனவே சற்று முயற்சி செய்து கவனமாக படித்தால் அதிகாரியாவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகவே இருக்கின்றன.

Latest news