பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து செய்தி வெளியிட்ட அமெரிக்காவின் ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ், ‘காஷ்மீர் போராளிகளால் 24 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தலைப்பிட்டது பெரும் சர்ச்சையானது. இதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதம் குறித்த புரிதலின்றி, பயங்கரவாதிகளை போராளிகள் என்று குறிப்பிட்டுள்ளதாக கூறி கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, நியூயார்க் டைம் நாளிதழின் தலைப்பில் இருந்த’போராளிகள்’ என்ற வார்த்தையை அடித்துவிட்டு அதற்கு பதிலாக ‘பயங்கரவாதம்’ என்று குறிப்பிட்டுள்ளது.