ஜெயிலர் படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்ற நிலையில் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.
கோவையில் இருந்து சென்னைக்கு வரும் போது விமானத்தில் ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு தந்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் “காஷ்மீரில் அமைதி திரும்பியது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை வழங்க வேண்டும்.” என அவர் கூறினார்.