Saturday, April 26, 2025

10 நாளில் பாகிஸ்தான் பஸ்பமாகும்? இந்தியாவுடன் கரம் கோர்க்கப்போகும் நாடுகள்? பாகிஸ்தான் பக்கம் யார் யார்?

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டி சர்வதேச அளவில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதற்றமான சூழ்நிலையில் ஒரு பக்கம் இரு நாடுகளும் போர் விமானங்களை இயக்கி பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றால் மறு பக்கம் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்யப்படுகிறது. அனல்பறக்கும் இந்த நிலையில் பாகிஸ்தான் மீது எப்போது வேண்டுமானாலும் இந்தியா தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுவது இந்தியா மற்றும் பாகிஸ்தானின் மூலை முடுக்கெல்லாம் போர் மணத்தை பரப்பிவிட்டுள்ளது. ஒருவேளை அப்படி போர் மூண்டால் இந்தியாவுக்கு எந்தெந்த நாடுகள் ஆதரவாக இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அப்படி போர் என்று வந்துவிட்டால் இந்தியாவுக்கு அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா, பிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் ஆதரவாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு சீனா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தானின் சில அமைப்புகள் மட்டுமே வலுவான ஆதரவை அளிக்கும் என்று கூறப்படுவதோடு இந்தியாவைப் பொறுத்தவரை பொருளாதார பலம், அது ஏற்படுத்தும் உலக அளவிலான தாக்கம், ராணுவ சக்தி ஆகியவற்றின் காரணமாக உலகத்தின் அதிக அளவு ஆதரவை தன பக்கம் இழுத்துவிடும் என கருதப்படுகிறது.

என்ன… List-ல நம்ம “தோஸ்த்து” ரஷ்யாவை காணோமே என்று கேட்கிறீர்களா? ராணுவ ஒத்துழைப்பில் நீண்ட காலமாக இந்தியாவின் நம்பிக்கைகுரிய ஒரு நண்பன் என்றால் அது ரஷ்யா தான் என்றாலும் சீனா-பாகிஸ்தான்-ரஷ்யா இடையே நட்பு இருப்பதால் பாகிஸ்தானுடன் போர் ஏற்பட்டால் நேரடியாக ராணுவ உதவி இந்தியாவுக்கு ரஷ்யாவால் வழங்கப்படாது என்றாலும் ஆயுதங்கள் மற்றும் சாதனங்கள் வழங்கப்படும்.

இதன்மூலம் பாகிஸ்தான் ராணுவத்துக்கு பிற நாடுகள் ராணுவ உதவிகள் செய்தாலும் இந்தியாவின் கை ஓங்க அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் எந்த நாடும் நேரடியாக ராணுவ உதவி வழங்கவில்லை என்றாலும் கூட இந்தியாவின் ராணுவ பலம் பெரிதாக இருக்கிறது. மேலும் உலக அளவில் நான்காவது பெரிய ராணுவ பலம் கொண்ட நாடு இந்தியா என்பதும், பாகிஸ்தான் 12வது இடத்தில் இருக்கிறது என்பதையும் தற்போது கவனிக்க வேண்டும். கப்பல் படை, தரைப்படை, விமானப்படை என முப்படைகளிலும், துணை ராணுவ படையிலும் இந்தியாவே ஆதிக்கம் செலுத்துகிறது என்பதால் போர் என்ற முடிவை பாகிஸ்தான் எடுத்தால் அது “ஆழம் தெரியாமல் ஆற்றில் காலை விட்ட கதையாகவே” முடிந்துவிடும்.

Latest news