இன்று நம் வாழ்வில் வங்கி சேவைகள் மிக முக்கியமானவை. சம்பளம் வருவது, தினசரி செலவுகள், ஆன்லைன் பரிவர்த்தனைகள், சேமிப்பு என எல்லாமே வங்கிக் கணக்கின் மூலமாகத்தான் நடைபெறுகின்றன. ஆனால், ஒரு வங்கிக் கணக்கை திறப்பதுடன் வேலை முடிந்துவிடவில்லை. அதைப் பராமரிக்கவும், அதற்கான விதிகளைப் பின்பற்றவும் நமக்கு ஒரு முக்கிய பொறுப்பு உள்ளது.
இந்தியாவின் நிதி அமைப்பை நிர்வகிக்கும் மைய அதிகாரமாக இருப்பது “இந்திய ரிசர்வ் வங்கி” அது அனைவரும் பின்பற்ற வேண்டிய சில நெறிமுறைகளை உருவாக்குகிறது. அவற்றில் முக்கியமான ஒன்று தான் — வங்கிக் கணக்கில் “மினிமம் பேலன்ஸ் ” என்ற கட்டுப்பாடு.
இந்த குறைந்தபட்ச இருப்பு என்பது, வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில் பராமரிக்கவேண்டிய குறைந்தபட்ச தொகையாகும். இதை பராமரிக்கத் தவறினால், வங்கிகள் அபராதங்களை விதிக்கக் கூடிய அதிகாரத்தைப் பெற்றுள்ளன.
முக்கியமாக, இந்தத் தொகை புவியியல் அடிப்படையில் மாறுபடும்.எடுத்துக்காட்டாக, நகர்ப்புற வாடிக்கையாளர்கள் அதிகமான தொகையை பராமரிக்க வேண்டும், ஆனால் கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு குறைவாக இருக்கும். இது அந்தந்த வங்கிகளின் கொள்கைகள் மற்றும் அந்த இடத்தின் பொருளாதார சூழ்நிலையைப் பொருத்தது.
ஒவ்வொரு வங்கிக்கும் தான் தன்னிச்சையான விதிகளை அமைத்துக் கொள்ளும் உரிமை உள்ளது. சில வங்கிகளில் ₹10,000 வரை மினிமம் பேலன்ஸ் தேவைப்படும்; சில வங்கிகளில் ₹2,000 போதும். அதனால்தான், வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கியின் விதிமுறைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.
வங்கி கணக்கில் உள்ள தொகை, குறைந்தபட்ச அளவுக்கு கீழே சென்றுவிட்டால், வாடிக்கையாளருக்கு SMS, Email, அல்லது கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இது, வாடிக்கையாளர் தனது நிதி நிலையை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை அளிக்கிறது.
ஒரு மாதத்திற்குள் மீண்டும் அந்த குறைந்தபட்ச நிலையை எட்டத் தவறினால், வங்கி அபராதத்தை விதிக்க ஆரம்பிக்கிறது. மேலும், இந்த அபராதங்கள் ஒரு அடுக்கு அடுக்கான முறையில் இருக்கும். குறைவாக இருந்தால் குறைவான அபராதம் – அதிகம் குறைந்தால் அதிகமான அபராதம்!
முக்கிய எச்சரிக்கை என்னவென்றால், கணக்கில் பணம் இல்லாமல் போனால்தான், அதை “ஓவர் டிராஃப்ட்” என்ற நிலைக்கு கொண்டு போய் வங்கி அதிகமான கட்டணங்களை வசூலிக்கலாம். இது, நம் நிதி கட்டுப்பாட்டை பாதிக்கக்கூடிய ஒன்று.
ஆனால் நன்மையும் இருக்கிறது! வங்கி கணக்கை வங்கி மூடிவிட்டால், அதிலிருந்து நம் பணத்தை யாரும் எடுக்க முடியாது – இது வாடிக்கையாளருக்கான ஒரு பாதுகாப்பு உறுதி.
இதற்காகவே இந்திய ரிசர்வ் வங்கி இந்த வழிகாட்டுதல்களை நிறுவியுள்ளது – நிதி ஒழுக்கம், வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் வங்கி சேவையின் நிலைத்தன்மை ஆகியவற்றை உறுதிசெய்யும் நோக்கத்தில்.
அதனால் , உங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டியது – ஒரு கட்டாயமான நிதி நடைமுறையாகவே பார்க்கப்பட வேண்டும். இது உங்களை அபராதங்களிலிருந்து காக்கும், உங்கள் நிதி ஒழுக்கத்தை மேம்படுத்தும், மற்றும் நிச்சயமாக, உங்களுக்கு ஒரு சுமூகமான வங்கி அனுபவத்தை வழங்கும்!