Monday, December 29, 2025

அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் காலமானார்

அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் A.R. சந்திரசேகரன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.

கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகரன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.

இதையடுத்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் கோகுல இந்திரா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Related News

Latest News