Saturday, April 26, 2025

IPL ரசிகர்களுக்கு சென்னை மெட்ரோவில் இலவச பயணம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள ஐ.பி.எல் போட்டியை காண வரும் ரசிகர்கள், போட்டியின் டிக்கெட்டை காண்பித்து மெட்ரோ ரெயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அனைத்து மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்தும் சேப்பாக்கம் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு இலவசமாக பயணம் செய்யலாம். பயணிகள் கடைசி மெட்ரோ ரெயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். போட்டிக்கான நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் தனித்துவமான கியூ ஆர் குறியீட்டை, தானியங்கி நுழைவு எந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணம் செய்யலாம்.

Latest news