பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் ஒருவரை பாஜக தொண்டர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எல்லை தாண்டி ஊடுருவலைத் தடுக்க புலானாய்வுத் துறை, மத்திய அரசு தோல்வி அடைந்ததன் பிரதிபலிப்பாக பயங்கரவாதத் தாக்குதல் உள்ளதா? என செய்தியாளர் ராகேஷ் ஷர்மா கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள் அந்த பத்திரிகையாளரை தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கதுவாவில் உள்ள ஷாஹிதி சவுக் மற்றும் ஜம்மு பத்திரிகையாளர் மன்றத்தில் ஊடக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக கதுவா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.