காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரரை பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் பெரோஜ்பூர் அருகே எல்லையை கடந்தாக கூறி ராணுவ வீரர் சிறைபிடிக்கபட்டுள்ளார். பாகிஸ்தான் பிடியில் இருக்கும் இந்திய வீரரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.