நடப்பு IPL தொடரில் சொந்த மைதான சாதகம் எந்த அணிக்குமே பெரிதாக இல்லை. இதற்கு சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய அணிகளை உதாரணமாக சொல்லலாம்.
இதற்கிடையே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளன. 180 ரன்களை சேஸிங் செய்ய திணறுவதும், சொந்த மைதானம் சாதகமின்றி இருப்பதும் CSKவிற்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.
மும்பை அணியுடனான தோல்விக்கு பிறகு, சென்னை அணியை மீண்டும் கட்டமைத்து அடுத்த ஆண்டு Comeback கொடுப்போம் என்று கேப்டன் தோனி பேசியிருந்தார். இதற்கு ஏற்றவாறு 17 வயது ஆயுஷ் மாத்ரே, 20 வயது ஷேக் ரஷீத் ஆகியோருக்கு CSK வாய்ப்பளித்துள்ளது.
இந்தநிலையில் மேலுமொரு அதிரடியாக SRHக்கு எதிரான போட்டியில் 22 வயது Vansh Bedi, 21 வயது Dewild Bravis இருவரையும் தோனி களமிறக்க உள்ளாராம். இதனால் ஹைதராபாத்திற்கு எதிரான போட்டி, ரசிகர்களுக்கு நல்லதொரு திரில்லர் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.