Thursday, December 25, 2025

“தாமரைக்கு கீழ தான் இரட்டை இலை” – கே.பி.ராமலிங்கம் அதிரடி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின், ‘இரட்டை இலைக்கு மேலே தாமரை மலரும்’ என்ற கருத்துக்கு, பாஜக துணைத் தலைவர் கேபி ராமலிங்கம் விளக்கமளித்துள்ளார்.

பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், பூ எப்போதும் மேலே தான் இருக்கும் இலை கீழே தான் இருக்கும். எப்போதும் மேலே பூ தான் இருக்கும். பூ கீழே இருக்காது.

இரட்டை இலையை நசுக்கி தான் தாமரை மலருமா என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், நசுக்கி, பிசுக்கி என்ற கேள்வி எல்லாம் அமைச்சர் பொன்முடியிடம் கேளுங்கள் என கூறினார்.

Related News

Latest News