நடப்பு IPL சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை போல, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தொடர்ந்து சொதப்பி வருகிறது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 2 வெற்றியை மட்டுமே RR ருசித்துள்ளது. விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக, சஞ்சு சாம்சன் முதல் 3 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்படவில்லை.
ரியான் பராக் தற்காலிக கேப்டனாக அணியை வழிநடத்தினார். இதேபோல லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும், சாம்சன் விளையாடவில்லை. அந்த போட்டியில் லக்னோ 2 ரன் வித்தியாசத்தில் வென்றது.
இந்தநிலையில் காயம் காரணமாக கேப்டன் சஞ்சு சாம்சன் அணியில் இருந்து விலகி இருக்கிறார். இதுகுறித்து ராஜஸ்தான், ”வயிற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக பெங்களூருவுக்கு எதிரான போட்டியில், சஞ்சு சாம்சன் ஆட மாட்டார்.
அவர் ஜெய்ப்பூரில் தங்கியிருந்து சிகிச்சையை மேற்கொள்வார். சாம்சனின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்,” என்று அறிவித்துள்ளது. இதனால் RCBக்கு எதிரான போட்டியிலும், ரியான் பராக் தான் கேப்டனாக செயல்படுவார் என தெரிகிறது.
தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், சஞ்சு சாம்சன் இருவருக்கும் இடையே மனக்கசப்பு நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற சூழலில் முக்கிய போட்டியை சாம்சன் மிஸ் செய்வது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.