Tuesday, April 22, 2025

மீண்டுமொரு ‘மேட்ச் பிக்சிங்’ புகார் என்ன ‘செய்ய’ போகிறது RR?

IPL ஆரம்பித்த 2008ம் ஆண்டிலேயே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வென்று அசத்தியது. அதன்பிறகு அந்த அணிக்கு அதிர்ஷ்டம் இல்லை. இதற்கு நடுவே சூதாட்ட புகாரில் சிக்கி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சேர்ந்து, 2 வருட தடையையும் 2016, 2017ம் ஆண்டில் எதிர்கொண்டது.

அணியின் கேப்டனாக இருக்கும் சஞ்சு சாம்சன் தற்போது Fitness இல்லாமல் அவதிப்படுகிறார். இதன் காரணமாக RR தொடர் தோல்விகளை எதிர்கொண்டு வருகிறது. இந்தநிலையில் லக்னோவுக்கு எதிரான போட்டியை, ராஜஸ்தான் தோற்றதற்கு மேட்ச் பிக்சிங் தான் காரணம் என்று, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின், இடைக்கால நிர்வாக குழு உறுப்பினர் ஜெய்தீப் பிஹானி, ” கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், எப்படி ஒரு அணியால் தோற்க முடியும். ஒரு சின்ன குழந்தை கூட இப்போட்டியில் மேட்ச் பிக்சிங் நடந்துள்ளதை புரிந்து கொள்ளும்,” என, காட்டமாக விமர்சித்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் மீது சொந்த மாநிலத்தின், கிரிக்கெட் சங்க உறுப்பினரே குற்றம் சுமத்தி இருப்பதால், IPL அரங்கில் இது பெரும் விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது. ஏப்ரல் 19ம் தேதி ஜெய்ப்பூரின் Sawai Mansingh Stadiumல் ராஜஸ்தான் -லக்னோ அணிகள் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 180 ரன்களை குவித்தது. தொடர்ந்து சேசிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 178 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ, வெற்றிவாகை சூடியது குறிப்பிடத்தக்கது.

Latest news