விஜய், ஜெனிலியா, வடிவேலு நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து இப்படத்தை மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரீ ரிலீஸாகியுள்ள சச்சின் திரைப்படம் மூன்று நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை ரூ. 5 கோடி வசூல் செய்துள்ளது.