கடைசி நிமிட ரயில் பயணம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும், ஏனெனில் டிக்கெட் பெறுவது மிகவும் கடினம். இதற்கு ஒரே வழி தட்கல் டிக்கெட் புக்கிங். IRCTC வலைத்தளம் அல்லது பயன்பாட்டைப் பயன்படுத்தி தட்கல் டிக்கெட்டுகளை விரைவாக எவ்வாறு முன்பதிவு செய்வது? என்பதை இதில் பார்க்கலாம்.
RCTC வலைத்தளம் மற்றும் மொபைல் செயலியில் தட்கல் முன்பதிவுகள் ரயில் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்பு திறக்கப்படுகின்றன. 2025-ல் புதிய அடிப்படையில், AC வகுப்புகளுக்கான தட்கல் டிக்கெட்டுகள் காலை 10 மணிக்கு மற்றும் AC அல்லாத வகுப்புகளுக்கான டிக்கெட்டுகள் காலை 11 மணிக்கு தொடங்கும்.
முன்பதிவு செய்ய எளிய டிப்ஸ்:
முன்கூட்டியே பயணிகளின் விவரங்களை தயார் செய்து வைத்திருங்கள்.
2 அல்லது 3 சாதனங்களில் ஒரே நேரத்தில் புக்கிங் முயற்சிக்கவும்.
UPI மற்றும் Internet Banking பயன்படுத்துதல், கிரெடிட் கார்டை விட வேகமாக பரிவர்த்தனையை முடிக்க உதவும்.
OTP உடனடியாக பதிவு செய்ய உங்கள் மொபைல் ஹெல்பில் தயாராக வைத்திருங்கள்.
தட்கல் கட்டணம்:
செகண்ட் கிளாஸ் டிக்கெட்டுக்கு 10% கூடுதல் கட்டணம்.
மற்ற வகுப்புகளுக்கு 30% கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.